The Climate Week India Blog — Climate Week India

காலநிலை வாரம் இந்தியாவின் வலைப்பதிவு.

நமது குழு பயணத்தின் முக்கிய நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் நினைவுகூரத்தக்க தருணங்களை காலவரிசைப்படி தொகுத்த பதிவு.

ஜூலை 2026: ‘தி காமன்ஸ்’, ‘தி கபோர்ட்’ மற்றும் பொறுப்புப் பரிமாற்றம்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • ஜூலை 13 அன்று, கூட்டணி தனது கூட்டாண்மை ஆவணத்தின் பெயரை, முறையான ஒப்பந்தத் தன்மையை வலியுறுத்திய ‘MoU’ என்பதிலிருந்து ‘தி காமன்ஸ் ஒப்பந்தம்’ என மாற்றியது. ஒவ்வொரு பங்காளர், தூதர், தன்னார்வலர் மற்றும் இணைப்பாளரும் பகிர்ந்து ஏற்றுக்கொண்ட ஒரே பொதுவான உறுதிமொழியாக இந்த ஒப்பந்தம் உருவெடுத்தது.
  • ஜூலை நடுப்பகுதியில் ‘தி காமன்ஸ் ஒப்பந்தம்’ நடைமுறைக்கு வந்தது. ஜெஃப்ரி மேற்கொண்ட அடித்தள முயற்சிகளின் மீது கட்டமைக்கப்பட்ட இந்த ஆவணம், கிரிட்கா, அஷீஷ், பியாலி, வைஷ்ணவி மற்றும் ஜேக்கப் ஆகியோரின் கூட்டு சிந்தனையும் பங்களிப்பும் மூலம் வடிவமைக்கப்பட்டது. ஒரு தனிநபர் அல்லது அமைப்பு இந்தக் கூட்டுப் பயணத்தில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடக்கூடிய 17 வெவ்வேறு வாய்ப்புகளை இது முன்வைக்கிறது.
  • அதே காலகட்டத்தில் ‘தி ஓபன் கபோர்ட்’ (The Open Cupboard) தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பங்கேற்பாளர்களுக்காக பங்கேற்பாளர்களாலேயே உருவாக்கப்பட்ட பகிரப்பட்ட வள மேடையாக இது செயல்படுகிறது. இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான ஆதரவுக்கான கோரிக்கையையோ அல்லது தங்களால் வழங்கக்கூடிய உதவிக்கான வாய்ப்பையையோ பதிவு செய்யலாம்—கொச்சியில் தேவைப்படும் ஒரு புரொஜெக்டரில் இருந்து, ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையேயான மொழிபெயர்ப்பு உதவி வரை பல்வேறு வளங்களையும் தேவைகளையும் இது இணைக்கிறது.
  • கால அட்டவணையில் ஒரு முக்கியமான மைல்கல் பதிவானது: Alt Eff, Haiyya மற்றும் Asar ஆகிய அமைப்புகள் இணைந்து 28 நிகழ்வுகளை நடத்துவதற்கான உறுதிப்பாட்டை மேற்கொண்டன. இதனுடன், 2025ஆம் ஆண்டில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவானது.
  • காலநிலை மாற்றம் தொடர்பான கலைச்சொற்களை எளிமைப்படுத்தும் நோக்கில் ஒரு தொடர் வடிவமைக்கப்பட்டது. இதில், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலநிலைச் சொற்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கும் பத்து சமூக ஊடகப் பதிவுகள் இடம்பெற்றன. இந்தச் சொற்கள் மற்றும் கருத்துகளை முதன்மைக் பங்கேற்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தூதர்கள், மற்றும் தன்னார்வலர்களும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்பதை பணிவுடன் ஏற்றுக்கொண்டு, அவற்றை தங்களது தாய்மொழிகளில் மொழிபெயர்க்க தன்னார்வலர்களை இணைந்து செயல்பட அழைத்தனர்.
  • அதன்பின் பொறுப்புப் பரிமாற்றம் தொடங்கியது. 2026ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து திவ்யா விலகுகிறார். அதேபோல், கிருத்திகாவின் தீவிரமான பங்களிப்பும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இப்படிப்பட்ட பொறுப்பு மாற்றங்கள் இயல்பாக நிகழும் வகையிலேயே இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகள், பொறுப்பேற்கும் நபர்கள் மாறினாலும் பணியின் தொடர்ச்சியும் குழுவின் செயல்பாட்டின் நிலைத்தன்மையும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
  • 2024ஆம் ஆண்டு அக்டோபரில் UNFCCC-யிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையிலிருந்து, இன்று பிற நாடுகள் இந்தக் குழுவின் செயல்முறைகளை அறிந்துகொள்ளவும், அதன் அணுகுமுறைகளைப் பின்பற்றவும் நம்மை அணுகும் நிலைவரை இந்தப் பயணம் வளர்ந்துள்ளது. மாறாமல் நீடித்த உண்மை ஒன்றே: இதை யாரும் தனித்து வழிநடத்துவதில்லை; அனைவரும் இணைந்தே உருவாக்குகிறார்கள்.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-july-2026

ஜூன் 2026: புதிய வாயில்கள் திறக்கின்றன; உலகின் கவனம் இப்போது இதை நோக்கித் திரும்புகிறது.

வாசிக்க கிளிக் செய்யவும்

  • ஜூன் 2026, காலநிலை வாரம் இந்தியா 2026 பொதுவெளியில் அறிமுகமாகி திருப்புமுனை மாதமாக அமைந்தது. நிகழ்வின் தேதிகள் அறிவிக்கப்பட்டன, புதிய லோகோவும் இணையதளமும் வெளியிடப்பட்டன. பங்கேற்பு விருப்பப் படிவம், முதல் பொதுவெளி சந்திப்பு, மற்றும் வாராந்திர பங்கேற்பாளர் சந்திப்புகள் மூலம் இணைவதற்கான வாயில்கள் திறக்கப்பட்டன. இந்தியாவில் தொடங்கிய இந்த முயற்சி, பிற காலநிலை வாரங்களின் கவனத்தை ஈர்த்து, உலகளாவிய உரையாடலாக உருவெடுக்கத் தொடங்கியது.
  • புதிய பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் நோக்கில் பங்கேற்பு விருப்பப் படிவம் வெளியிடப்பட்டது. வைஷ்ணவி மற்றும் கிருத்திகாவின் பங்களிப்புடன் இது இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டதுடன், மராத்தி மொழியிலும் வெளியிடப்பட்டது. மகாராஷ்டிராவில் இந்த முயற்சியின் செயல்பாடுகளை முன்னெடுக்க மயூரி, சுபாங்கி மற்றும் ரோஷன் ஆகியோரைக் கொண்ட தனிக்குழுவும் உருவாக்கப்பட்டது.
  • 19 நிகழ்வுகளுக்கான நிதித் தேவை ரூ. 6.6 லட்சமாக கணக்கிடப்பட்டது. உறுதியான நிதியளிப்பாளர் இல்லாத நிலையிலும், குழு தொடக்கத்திலிருந்தே ஏற்றுக்கொண்ட அதே அணுகுமுறையுடன் தனது பயணத்தை தொடர்ந்தது.
  • இந்தக் குழு “பாங்காக் காலநிலை செயல் வாரம்” தொடக்கக் குழுவுடன் தொடர்பை ஏற்படுத்தியது. பாங்காக்கில் திவ்யா கள உரையாடல்களைப் பதிவு செய்தார். ‘லண்டன் கிளைமேட் ஆக்ஷன் வீக்’ குழுவை இருமுறை அணுகியிருந்தும் இதுவரை பதில் கிடைக்காத நிலையில், LCAW நடைபெறும் காலத்தில் ஜேக்கப் லண்டனில் நேரடியாகக் களத்தில் இருப்பார்.
  • குழுவின் முதல் சந்திப்பு ஜூன் 16 அன்று நடைபெற்றது. சுமார் 45 பேர் பங்கேற்ற இதில், காலநிலை வாரம் இந்தியாவின் செயல்முறை மற்றும் அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-june-2026

மே 2026: புதிய குழுவுடன், புதிய தளத்துடன், தொடக்கத்திற்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே

வாசிக்க கிளிக் செய்யவும்

  • மே 8 தொடக்கச் சந்திப்பு, 2026ஆம் ஆண்டுக்கான புதிய குழுவை ஒன்றிணைத்தது. ஜேக்கப், திவ்யா, கிருத்திகா, ரோஷன், மயூரி மற்றும் சுபாங்கி இணைந்து வெளித்தொடர்பு, இணையதளம், சமூக ஊடகம் மற்றும் தூதர் ஒருங்கிணைப்பு பொறுப்புகளை ஏற்றனர்.
  • மகாராஷ்டிராவுக்கென ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது. கிராமப்புற வெளித்தொடர்பை ரோஷன் மற்றும் சுபாங்கியும், நகர்ப்புற ஒருங்கிணைப்பை மயூரியும் முன்னெடுத்து, ஸ்வாச் புனே, புனே ரிவர் ரிவைவல் மற்றும் எர்த்திங் ஸ்டோர்ஸ் போன்ற சாத்தியமான பங்கேற்பாளர்களுடன் இணைந்து செயல்பட வழியினை ஏற்படுத்தினர்.
  • பதிவு செயல்முறையை மேம்படுத்தும் நோக்கில், குழு லுமா தளத்தின் பயன்பாட்டை சோதிக்க தொடங்கியது.
  • பங்கேற்பு விருப்பப் படிவம் வைஷ்ணவியின் பங்களிப்புடன் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. மயூரி “எங்களைப் பற்றி” பகுதியை மராத்தி மொழியில் மொழிபெயர்த்து, இணைவதற்கான ஒரு அழைப்பு செய்தியையும் சேர்த்தார்.
  • ஜேக்கப் 2026ஆம் ஆண்டுக்கான லோகோவை உருவாக்கும் பணியைத் தொடங்கினார்.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-may-2026

ஏப்ரல் 2026: மறுகட்டமைப்புக்கு முந்தைய அமைதியான கட்டம்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • 2026 தேதிகள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் அறிவிப்புகளை விட மறுசீரமைப்புக்கான காலமாக அமைந்தது. 2026ன் நோக்கம், தொடர வேண்டியவை மற்றும் புதிதாக உருவாக்க வேண்டியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
  • 2025இன் மிக முக்கிய பாடமாக, பழைய தளத்தின் வரம்புகளைத் தொடர்ந்து சமாளிப்பதை விட, புதிய இணையதளத்தை மறுகட்டமைப்பதே சரியான பாதை என்ற தெளிவு உருவானது.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-april-2026

மார்ச் 2026: அடுத்த ஆண்டுக்கான தேதி உறுதி, செயல்முறைப் பயணத்தின் பதிவும்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • குழு காலநிலை வார இந்தியா 2026க்கான தேதியை (செப்டம்பர் 27–அக்டோபர் 4) நிர்ணயித்து, ஒரே நன்கொடையாளரை சாராமல் கூட்டாக நிதி திரட்டத் தொடங்கியது. இதன் செயல்முறைகள் ஆவணப்படுத்தப்பட்டது; இதைப் பற்றி பிற குலுக்களும் ஆர்வம் காட்டத் தொடங்கின.
  • இந்த வழிகாட்டி, பங்கேற்பாளர் உரிமை, ஒப்பந்தங்கள், நடத்தை விதிமுறை மற்றும் இலக்குகள் உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளையும், நிகழ்வுக்கு ஒரு வருடம் முன்பிருந்து நிகழ்வுக்குப் பிந்தைய மூன்று மாதங்கள் வரையிலான காலவரிசையையும், செயல்முறையை முன்னெடுக்கும் விதம் மற்றும் மாதிரிகளையும் தொகுத்து வழங்கியது.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-march-2026

பிப்ரவரி 2026: ஒரு முடிவு, ஒரு இரண்டாண்டு விழா, மற்றும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • கொச்சி பியன்னாலே உடனான உரையாடல், நாட்டின் முன்னணி கலை நிகழ்வு ஒன்றில் காலநிலை வார இந்தியாவின் பங்கேற்புக்கான வாய்ப்பை உருவாக்கியது. அதே நேரத்தில், பிற காலநிலை வாரங்கள் குறித்த வெளிப்படையான உரையாடல், காலநிலை வார இந்தியா எந்த வழியில் பயணிக்கக் கூடாது என்பதற்கான முக்கியமான பாடத்தை வழங்கியது.
  • இந்த மாதத்தின் அனைத்து அனுபவங்களும் ஒரே தெளிவை அளித்தன: காலநிலை வார இந்தியா, ஐந்து நட்சத்திர வசதிகளுக்குள் மட்டுப்படும் நிகழ்வாக அல்லாமல், மக்களின் வாழ்வியலுடன் ஆழமாக வேரூன்றிய நிகழ்வாக இருக்க வேண்டும்.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-february-2026

ஜனவரி 2026: பல குரல்களை ஒரே கோரிக்கையாக மாற்றிய மாதம்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • இந்த மாதம், குழுவினரின் பல்வேறு கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, முடிவெடுப்பவர்களைச் சென்றடையக்கூடிய ஒரே வலுவான செயல்திட்டம் வடிவமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. இதனுடன் தாக்க அறிக்கை, தூதர் அழைப்பு மற்றும் பிராந்தியங்களுக்கான நடைமுறை வழிகாட்டியும் உருவாக்கப்பட்டன.
  • ஜனவரி 28 அன்று நடைபெற்ற கலந்துரையாடல், ஒரு முக்கிய நோக்கத்தை வரையறுத்தது: Climate Week India 2025-இல் காணொளியாகப் பதிவு செய்யப்பட்ட 45 சமூகத் தேவைகளிலிருந்து, முடிவெடுப்பவர்களிடம் கொண்டு செல்லக்கூடிய ஒரே ஒருங்கிணைந்த செயலுக்கான அழைப்பை உருவாக்குவது.
  • தூதர் பொறுப்புக்காக பியாலி, ஆஷீஷ், வைஷ்ணவி மற்றும் ஜெஃப் ஆகியோரின் பெயர்கள் முன்னிறுத்தப்பட்டன.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-january-2026

டிசம்பர் 2025: வளர்ந்து வரும் கூட்டமைப்புக்கான வழிமுறைகள் உருவான மாதம்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • டிசம்பர் 31 அன்று நடைபெற்ற கலந்துரையாடல், பங்கேற்பாளர்களின் தொடர்புகளுக்கான WhatsApp நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதிலும், குழுவின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாட்டு வடிவத்தைத் தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தியது.
  • வழிகாட்டும் எண்ணம், அனுபவம் அறிவும என அனைத்தும் ஒருசேர கிடைத்தன; வெறும் காட்சிப்படுத்தலுக்கான மேடையாக அல்ல. அது அன்பும் கவனமும் தாராளமான பகிர்வும் நிறைந்த, அனைவரும் பங்களிக்கக்கூடிய இடமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
  • இந்த விதிமுறைகளுடன், வரும் ஆண்டில் இந்த இடத்தை மேலும் தீவிரமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த பங்கேற்பாளர்களை அழைக்கும் எளிய புத்தாண்டுச் செய்தியும் பகிரப்பட்டது.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-december-2025

நவம்பர் 2025: தன் பயணத்தைத் தானே பிரதிபலித்த மாதம்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • குழு, பங்கேற்பாளர்களின் பயணங்களையும் பங்களிப்புகளையும் பிரதிபலிக்கும் புகைப்படக் கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கியது. மாதாந்திர கலந்துரையாடலில், தாக்க அறிக்கை அதைத் தொகுத்த ஒருங்கிணைப்பாளர்களின் ஆவணமாக மட்டும் இல்லாமல், முழுக் குழுவின் சொத்தாக அமைய வேண்டும் என்ற அணுகுமுறை ஆராயப்பட்டது. அதன் முடிவாக, ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்களுடையதாக உணர்ந்து பயன்படுத்தக்கூடிய வகையில் அறிக்கையை உருவாக்கும் பாதை தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • திட்டத்தின் முக்கிய கொள்கையாக ஒரு எண்ணம் தொடர்ந்து முன்மொழியப்பட்டது: முடிக்கப்பட்ட அறிக்கையை வழங்குவதற்குப் பதிலாக, பங்கேற்பாளர்களுக்கு தங்கள் சொந்த அனுபவங்கள், பார்வைகள் மற்றும் பங்களிப்புகளை இணைத்து அறிக்கையை உருவாக்கிக்கொள்ளக் ஒரு கட்டமைப்பை உருவாக்குவது.
  • கூட்டமைப்பு, ஏற்கனவே நடைபெறும் முக்கியச் சந்திப்புகளுடன் இணைந்து நேரடி சந்திப்புகளை ஒருங்கிணைத்தது. இதில் ஆல்ட் எஃப், ஜஸ்டிஸ்மேக்கர்ஸ் மேலா மற்றும் செரெண்டிபிட்டி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் போன்ற நிகழ்வுகளுடனான இணைப்புகளும் அடங்கும்.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-november-2025

அக்டோபர் 2025: ஒரு வார நிகழ்விலிருந்து ஆண்டு முழுவதும் இயங்கும் இயக்கமாக

வாசிக்க கிளிக் செய்யவும்

  • குழு, காலநிலை வார இந்தியாவை ஆண்டு முழுவதும் தொடரச் செய்யும் தூதர் திட்டம் மற்றும் தாக்க அறிக்கை உருவாக்கத்தில் கவனம் செலுத்தியது. இதனுடன், வாராந்திர சந்திப்புகள் மாதாந்திர கலந்துரையாடல்களாக மாற்றப்பட்டன.
  • டெர்ரிஜெனரேஷன் ஐ சேர்ந்த கிருத்திகா, தரவுசார் மற்றும் தரநிலை ஆவணப்படுத்தல் செயல்முறையை வழிநடத்தினார். கருத்துக்கணிப்புகள் ஒருங்கிணைந்த தரவுத் தொகுப்பாக மாற்றப்பட்டன; காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பங்கேற்பாளர் வாரியாக ஒழுங்கமைக்கப்பட்டு, உரைமாற்றம் செய்யப்பட்டு, அவற்றிலிருந்து முக்கியக் கற்றல்கள் தொகுக்கப்பட்டன. இந்தப் பதிவுகளின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்கான தாக்க அறிக்கை கருப்பொருள்கள் மற்றும் சமூகக் கற்றல்கள் உருவாக்கப்பட்டன.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-october-2025

செப்டம்பர் 2025: நிகழ்வு வாரமும், நேர்மையான மதிப்பாய்வும்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • செப்டம்பர் 7 முதல் 14 வரை, நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடங்கிய பின்னர், பெரும்பாலான நிகழ்வுகளை கூட்டாளர்களே தன்னிச்சையாக முன்னெடுத்தனர்; ஒருங்கிணைப்பாளர்களின் ஆதரவு மிகக் குறைவாகவே தேவைப்பட்டது. அசாமில் நூறு பேர் பங்கேற்றனர்; ஆல்ட் எஃப் ஒரே வெள்ளிக்கிழமையில் ஒன்பது நகரங்களில் திரைப்படக் காட்சிகளை நடத்தியது; சுவரோவியங்களும் உருவாகின. அதன் பின், குழு நேர்மையான மீள்பார்வையில் ஈடுபட்டது: எது சிறப்பாக அமைந்தது, குறைந்த வளங்களுடனும் பெரும்பாலும் நிதியில்லாமலும் இயங்கிய சிறிய குழு இன்னும் எவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதைக் கண்டறிந்தது.
  • முடிவில், தாக்க அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டபடி, காலநிலை வார் இந்தியா 2025, 16 மாநிலங்களில் நடைபெற்ற 94 நிகழ்வுகள், 35 கூட்டாளர்களின் பங்களிப்புகள் மற்றும் 8,500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் ஒரு குறிப்பிடத்தக்க பயணமாக நிறைவடைந்தது.
  • நிகழ்வுக்கு முன்பான கவன ஈர்ப்பு முயற்சிகள் அவசரமாக நிகழ்த்தப்பட்டதையும், ஆவணப்படுத்தல் குறித்த தெளிவு குறைவாக இருந்ததையும், குறைந்த வருகை-பதிவுகள் காரணமாக சில நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டதையும் குழு நேர்மையாக ஏற்றுக்கொண்டது.
  • ஒரு கட்டமைப்பு சார்ந்த பாடமாக, குறைந்த வளங்களால், தொலைதூரத்தில் இருந்த பகுதி நேர வடிவமைப்பாளரையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தனிநபரின் குறைபாடு அல்ல; வளங்களின் வரம்பாகும். இது, முக்கியமான கட்டத்தில் இணையதளப் பணிகளின் வேகத்தை இது பாதித்தது.
  • தரவு பல்வேறு இடங்களில் பரவியிருந்ததால், ஒருங்கிணைப்பில் சவால்கள் ஏற்பட்டன. கூட்டாளர் தகவல் தாள் மற்றும் முதன்மை காலண்டர் இடையேயான இடைவெளி காரணமாக, சில புதுப்பிப்புகள் இணையதளக் குழுவை சென்றடையவில்லை; இதனால் ஐந்து நிகழ்வுகள் இடம்பெறாமல் போயின.
  • அடுத்த ஆண்டுக்கான மாற்றங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டன: கூட்டாளர்கள் தங்கள் நிகழ்வுகளைத் தாங்களே பதிவேற்றி நிர்வகிக்கக்கூடிய இணையதளம், ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒரு பிரத்யேக தொடர்பாளர், தெளிவான WhatsApp நடைமுறைகள், நிதி திட்டமிடல் மற்றும் பிராந்தியங்களை இணைத்து முன்னெடுக்கும் முறையான தூதர் அமைப்பு.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-september-2025

ஆகஸ்ட் 2025: சுவரோவியங்கள், நகைச்சுவை கலைஞர்கள் மற்றும் தொடர்ந்த ஆதரவுகள்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • ஆகஸ்ட் மாதம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது: முன்பதிவுகள் வேகமாக குவிந்தன, ஊடகக் குழு இணைந்தது, மேலும் “பூமி பாஷா” என்ற காலநிலை சுவரோவியத் தொடரும் உருவானது. நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்பே, ஹரித்வார் முதல் ஹேவ்லாக் வரை, மோரிகாவ் முதல் மும்பை வரை இயக்கத்தின் தடம் விரிந்திருந்தது; அறிமுகக் காணொளி அதன் பரந்த பயணத்தை வெளிப்படுத்தியது.
  • இந்த நிலையில் “பூமி பாஷா” அறிமுகப்படுத்தப்பட்டது; “பூமியின் மொழி” என்ற பொருளைத் தரும் இந்தக் காலநிலை சுவரோவியத் தொடரில் தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளின் வழியாக உருவாக்கப்பட்ட ஐந்து படைப்புகள் இடம்பெற்றன.
  • ஆகஸ்ட் 28ல், திவ்யா மற்றும் ஜேக்கப் அறிமுகக் காணொளியை உருவாக்கினர். இதில், இந்தப் பயணத்தின் வளர்ச்சி, குழுக்களின் தோற்றம் மற்றும் கூட்டாளர்களின் பங்களிப்பு தெளிவாகப் பதிவு செய்யப்பட்டது: இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றிணைத்த கூட்டாளர்களின் வலையமைப்பு, 2019-ல் ஒரு நகரத்தில் தொடங்கிய ஒரு வார நிகழ்விலிருந்து, அன்றைய நிலவரப்படி 22 இடங்களில் 35 கூட்டாளர்களுடன் 55-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய இயக்கமாக வளர்ந்திருந்தது.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-august-2025

ஜூலை 2025: வெற்றியை எவ்வாறு வரையறுப்பது?

வாசிக்க கிளிக் செய்யவும்

  • ஜூலை 11 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில், பெங்களூரில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்பு மற்றும் அதற்கான இடத் தேர்வு குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
  • ஜூலை 14 அன்று, குழுவின் பணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத் தேவையான அனைத்து காட்சி அடையாளம் மற்றும் தகவல் தொடர்பு பொருட்களின் பட்டியலை குழு உருவாக்கியது.
  • ஜூலை 25 அன்று நடைபெற்ற குழுவினர் அமர்வில், வெற்றியை அளவிடுவதற்கான தெளிவான அளவுகோல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வெளியிடப்பட்ட உறுதிமொழிகள், பங்கேற்ற அமைப்புகளின் பல்வகைமை, ஊடக கட்டூரைகள், செயல்படுத்தக்கூடிய அறிக்கைகள் மற்றும் கூட்டணிகள் ஆகியவை முக்கிய வெற்றிக் குறியீடுகளாக (KPI-கள்) அடையாளம் காணப்பட்டன.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-july-2025

ஜூன் 2025: இலக்குகளை உறுதிப்படுத்தி, இயக்கத்திற்கான நுழைவாயிலை அமைத்தல்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • இலக்குகள் தெளிவுபடுத்தப்பட்டன: பங்கேற்பாளர்களின் கூட்டு குரலை பிரதிபலிக்கும் ஆவணத்தை உருவாக்கி, ஜனவரி 2026க்குள் முடிவெடுப்பவர்களிடம் கொண்டு சேர்ப்பது.
  • பெங்களூரு கிரியேட்டிவ் சர்க்கஸ் முதல் தொடக்க நிகழ்வுக்கான தளத்தை வழங்கியது: செப்டம்பர் 7 அன்று நடைபெறும் அவர்களின் Market Day, காலநிலை கருப்பொருளுடன் கூடிய தொடக்க நிகழ்வாக இணைக்கப்பட்டது.
  • ஜூன் 27 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில், கூட்டணி ஒரு LinkedIn பக்கத்தை உருவாக்கவும், ஒவ்வொரு அமைப்பும் தங்கள் நிகழ்வுகளுக்கான காட்சிப் பொருட்களைத் தாங்களே வடிவமைக்கவும் ஒப்புக்கொண்டது. தேவையான இடங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கினர்.
  • பரவலான கூட்டாண்மை முறை இனி தற்காலிகத் தீர்வல்ல; ஜூன் மாதத்திற்குள், அதுவே Climate Week India-வின் இயல்பான செயல்முறையாக மாறியது

நடத்தை விதிமுறைகளை இங்கே காணலாம். →

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-june-2025

மே 2025: பதில்களை விட வேகமாக கிடைத்த யோசனைகள்

வாசிக்க கிளிக் செய்யவும்

  • ஹைய்யா, காலநிலை வாரத்திற்க்காக ஒரு பிரத்யேக உள்குழுவை உருவாக்குவதாகத் தெரிவித்தது. இந்தக் குழு, காலநிலை நீதி மற்றும் அதன் உறுப்பினர்கள் முன்னெடுக்கும் களப்பணிகளை மையமாகக் கொண்டு செயல்படும்.
  • ஆல்ட் எஃப், பத்து நகரங்களில் மாதந்தோறும் நடைபெறும் ஐந்து குறும்படத் திரையிடல்களைக் கொண்ட திரைப்படக் கழகத்தை முன்மொழிந்தது. டெர்ரிஜெனரேஷன், ஹெசராகட்டா மற்றும் லால்பாக் பகுதிகளில் பறவை மற்றும் உயிரியல் பல்வகைமை நடைப்பயணங்களையும், பெங்களூரு, டெல்லி மற்றும் கோவாவில் விரைவு இணைப்பு நிகழ்வுகளையும் திட்டத்தில் இணைத்தது.
  • மே மாதம் முழுவதும், காலநிலை வார இந்தியா 2025-ன் ஆறு இலக்குகள் குழுவின் கூட்டு பங்களிப்பால் வடிவமைக்கப்பட்டன: உள்ளூர் காலநிலைத் தீர்வுகளை கொண்டாடுவதிலிருந்து, ஜனவரி 2026க்குள் முடிவெடுப்பவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும் கூட்டு குரலை பிரதிபலிக்கும் ஆவணத்தை உருவாக்குவது வரை.
  • மே 30 அன்று, இணைக் குழு தனது பங்குகளைத் தெளிவுபடுத்தியது: ஆட்சி மற்றும் முடிவெடுப்பில் ஈடுபடுவோர் முக்கிய கூட்டாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகள் ஒற்றுமை கூட்டாளர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பங்கேற்பாளர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். ஸ்பான்சர்கள் எப்போதும் ஒற்றுமை கூட்டாளர்கள் பிரிவிலேயே இடம்பெறுவார்கள் என்ற விதி உறுதிசெய்யப்பட்டது.

காலநிலை வாரம் இந்தியா இலக்குகளை இங்கே காணலாம்.

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-may-2025

ஏப்ரல் 2025: அனைவரும் ஒன்றிணைந்த முதல் சந்திப்பு

வாசிக்க கிளிக் செய்யவும்

  • ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற தொடக்கச் சந்திப்பு, சில முக்கிய கூட்டாளர்களை ஒரே தளத்தில் இணைத்தது.
  • ஜேக்கப், முக்கியக் குழுவிற்கான பெயரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியைத் தொடங்கினார். ஹரியாலி ஹீரோஸ், தர்தி டிஃபெண்டர், ஜல் ஜோதி, டெலுலு டிஸ்பெல்லர்ஸ் மற்றும் ஹாட் மெஸ் கலெக்டிவ் உள்ளிட்ட பல பெயர்கள் விவாதிக்கப்பட்டன; ஆனால் அவற்றில் எதுவும் இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
  • திவ்யா, கூட்டாளர்களுக்கான ஒப்பந்தங்களை உருவாக்கும் செயல்முறையை வழிநடத்தினார்; அவை இணையதளத்தில் பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதை அனைவரும் முன்கூட்டியே அறிந்திருந்தனர்.
  • தொடக்கக் கட்டத்திலேயே பல நிகழ்வு யோசனைகள் தெளிவான வடிவம் பெற்றன: பிசிசி அமைப்பின் திரைப்படத் திரையிடல்கள் மற்றும் கண்காட்சி நிகழ்வு, டெர்ராகான்ஷியஸ் அமைப்பின் கலந்துரையாடல் மற்றும் மெய்நிகர் அனுபவம், அனனாஸ் அமைப்பின் உள்ளூர் தாவர நர்சரி, இந்தூரில் யூத் கி ஆவாஸ் அமைப்பின் எழுத்துத் தொடர், டைனெப் அமைப்பின் தூய்மைப் பணிகள் மற்றும் டெர்ரிஜெனரேஷன் அமைப்பின் விரைவு இணைப்பு நிகழ்வுகள் ஆகியவை திட்டமிடப்பட்டன.
  • இதனுடன் வாராந்திர சமூகக் கலந்துரையாடல்கள் தொடங்கின; அவை நிகழ்வு வாரம் வரை கூட்டணியை ஒன்றிணைத்து, அதன் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற முக்கியமான நடைமுறையாக அமைந்தன.

குழுக்களின் ஒப்பந்தங்களை இங்கே காணலாம். →

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-april-2025

ஜனவரி முதல் மார்ச் 2025 வரை: தொடர்புப் பட்டியலும், ஒரு புதிய சொல்லும்

வாசிக்க கிளிக் செய்யவும்

நாங்கள் தொடர்ந்து தொடர்புப் பட்டியலை விரிவுபடுத்திக் கொண்டிருந்தோம். ஏற்கனவே அறிமுகமும் நம்பிக்கையும் இருந்தவர்களிடமிருந்து தொடங்கி கூட்டாளர்களை அணுகினோம்; புதிய அமைப்புகள் இணைந்ததுடன், தங்களுக்கு பொருத்தமானவர்களையும் அழைத்து வந்தன. இந்தக் காலகட்டத்தில் ஒரு முக்கியமான புரிதல் உருவானது: கூட்டாளர்கள் நிகழ்வுகளை நடத்தவும், கொள்கை முடிவெடுப்பவர்களைச் சந்திக்கவும் விரும்பினர்.

  • 2025 ஜனவரி முதல் மார்ச் வரை, எங்களுக்குப் பரிச்சயமான மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்புகளைத் தொடர்ந்து அணுகினோம். தேர்வுக்கான ஒரே அளவுகோல்கள் நம்பிக்கையும் பரஸ்பர அறிமுகமும்தான். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், திறந்த மனதுடனும் பரஸ்பர மரியாதையுடனும் உரையாட முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களுடன் மட்டுமே இந்தப் பயணத்தைத் தொடங்கினோம்.
  • இந்தக் காலகட்டத்தில், ஹைய்யா (அக்ஷய், பூமிகா, அஞ்சலி), பேர் நெசசிட்டீஸ் (சஹர்), மற்றும் முடிட்டோ (தேவினா) உள்ளிட்ட புதிய கூட்டாளர்கள் எங்களுடன் கைகோர்த்தனர். அவர்களின் இணைவு இந்த முயற்சிக்கு புதிய சிந்தனைகளையும் பல்வேறு அனுபவங்களையும் கொண்டு வந்தது.
  • ஒவ்வொரு கூட்டாளரும் தங்களின் நம்பகமான தொடர்புகளை இந்த முயற்சியுடன் இணைத்தனர். அதனால், எங்கள் குழு ஆட்சேர்ப்பு முயற்சிகளால் உருவானதல்ல; நம்பிக்கை, உறவு, மற்றும் பரஸ்பர அறிமுகங்களின் வழியே இயல்பாக விரிவடைந்தது.
  • காலப்போக்கில், எங்களின் பங்கு மற்ற கூட்டாளர்களின் பங்கிலிருந்து வேறுபட்டது என்பது தெளிவானது. கூட்டாளர்கள் நிகழ்வுகளை முன்னெடுத்து, கொள்கை வகுப்போருடன் உரையாடி, சந்திப்புகளில் பங்கேற்றனர். திவ்யாவும் நானும் அனைவரையும் ஒரே மேடையில் இணைத்து, சந்திப்புகளுக்குப் பிறகும் தொடர்ந்து தொடர்பில் இருந்து அந்த இணைப்பை வலுப்படுத்தினோம்.
  • எங்களின் தனித்துவமான பங்கை வெளிப்படுத்தும் ஒரு சொல்லைத் தேடினோம். அதற்காக “anchor” என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில், கூட்டணியை தற்காலிக போக்குகள், நிதி சார்ந்த விருப்பங்கள், தனிப்பட்ட புகழாசை அல்லது எந்த ஒரு தரப்பின் அளவுக்கு மீறிய செல்வாக்கும் அதன் பாதையை மாற்றிவிடாமல் உறுதியாக நிலைநிறுத்துவதே எங்களின் பொறுப்பாக இருந்தது
  • கூட்டாளர் அமைப்புகளை இரண்டு வகைகளாகப் பிரித்தோம். கூட்டணியின் முடிவெடுத்தல் மற்றும் வழிநடத்தலில் நேரடியாகப் பங்குபெறும் அமைப்புகள் முதன்மைக் கூட்டாளர்கள் (Core Partners); இடம், வளங்கள், நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் ஒற்றுமைக் கூட்டாளர்கள் (Solidarity Partners).
  • நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு தெளிவான கொள்கையை ஏற்றுக்கொண்டோம்; அது இன்றும் மாறாமல் தொடர்கிறது. எந்த நிதியுதவியாளரும் அல்லது ஆதரவாளரும் ஒற்றுமைக் கூட்டாளராக (Solidarity Partner) மட்டுமே இணைய முடியும். அவர்களின் நிதி இந்த முயற்சிக்கு வலுசேர்க்கலாம்; ஆனால் அதன் நோக்கம், திசை, அல்லது முடிவுகளை வழிநடத்த முடியாது.
  • இது இன்னும் 2019-ஆம் ஆண்டைப் போல பெங்களூரை மையமாகக் கொண்ட காலநிலை வாரம் என்றே நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், எங்கள் திட்டப் பணித்தாளில் மெதுவாக விரிந்துகொண்டிருந்த வரைபடம், அது இனி ஒரு நகரத்தின் கதை மட்டுமல்ல என்பதை அமைதியாக உணர்த்திக்கொண்டிருந்தது.

ஜேக்கப் செரியன், வழிநடத்துவார், காலநிலை வாரம் இந்தியா

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-january-to-march-2025

அக்டோபர் முதல் டிசம்பர் 2024: இரண்டு மாதங்கள் தொலைபேசி உரையாடல்களில்

வாசிக்க கிளிக் செய்யவும்

இப்படிப்பட்ட ஒரு முயற்சியை நாங்கள் ஏற்கனவே ஒருமுறை மேற்கொண்டிருந்தோம். 2019-ஆம் ஆண்டு காலநிலை வாரம் பெங்களூரு என்ற பெயரில் ஏழு நாட்கள், ஏழு நிகழ்வுகளை நடத்தினோம். அந்த வாரத்தில் உருவான ஒத்துழைப்பு அதன்பிறகும் தொடர்ந்தது. ஒரு வருடத்திற்கு முன், அந்த முயற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆரம்பத் திட்டம் எளிமையானது—2019-ஐப் போலவே பெங்களூரை மையமாகக் கொண்ட ஒரு காலநிலை வாரம். அக்டோபரில், ஆதரவுக்காக UNFCCC-க்கு எழுதினேன். உதவி கிடைக்கவில்லை. அதனால், நான் தொலைபேசியை எடுத்தேன். அடுத்த இரண்டு மாதங்கள், ஒரு பெயர்ப் பட்டியலும் எண்ணற்ற தொலைபேசி உரையாடல்களும்தான் என்னுடன் இருந்தன. பெரும்பாலான அழைப்புகள் ஒரே கேள்வியுடன் தொடங்கின: “2019 நினைவிருக்கிறதா?”

  • 2024 அக்டோபரில், ஆதரவுக்காக UNFCCC-க்கு எழுதினேன். அவர்களின் நிதி வரம்புகள் காரணமாக உதவ முடியாது என்ற பதில் வந்தது. ஆனால், அந்த “இல்லை” என்பதுதான் இந்தப் பயணத்தின் உண்மையான தொடக்கமாக அமைந்தது.
  • அடுத்த இரண்டு மாதங்கள், சாத்தியமான கூட்டாளர்களை நானே தொடர்ந்து தொடர்புகொண்டேன். திஷாவும் நானும், ஒவ்வொரு பெயரையும் ஒரு புதிய நம்பிக்கையாக இணைத்து, எங்கள் கூட்டாளர்களின் குழுவை படிப்படியாக உருவாக்கினோம்.
  • நான் தொடர்புகொண்டது, எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான அமைப்புகளையே. அவற்றில் டெர்ரெஜெனரேஷன் (TerreGeneration), பெங்களூரு கிரியேட்டிவ் சர்க்கஸ் (மணிஷா), சே ட்ரீஸ் (கபில் ஷர்மா), ஜட்கா.ஆர்க் (திவ்யா), ஆல்ட் எஃப் (குனால்), டெர்ராகான்ஷியஸ் (பூஜா, தானியா), கிரீன்லேன் (வருண்), இந்தியன் பிளாக்கர்ஸ் ஆர்மி (ப்ளாக் ராஜ்), மிஷன் ஷூன்யா (கிரீஷ்), FFF இந்தியா (திஷா), TINEB (டி.டி.) உள்ளிட்ட பல அமைப்புகள் இருந்தன.
  • நவம்பர் 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில், எங்கள் மனதில் இருந்த திட்டத்திற்கு செலவுக் கணக்கிட்டோம். ஒரு நகரத்தில் 21 முதல் 28 நிகழ்வுகளுடன் மாநாட்டு வடிவில் நடத்த வேண்டுமெனில், முதல் நகரத்திற்கே ஒரு கோடிக்கும் அதிகமாகவும், ஒவ்வொரு கூடுதல் நகரத்திற்கும் சுமார் 40 லட்சம் ரூபாயும் தேவைப்படும். காகிதத்தில் பார்த்தபோது, அது எங்களிடம் இல்லாத அளவுக்கு பெரிய தொகையாக இருந்தது. ஆனால், பிரச்சினை பணத்தில் மட்டும் இல்லை; எங்கள் சிந்தனையே பழைய மாநாட்டு மாதிரிக்குள் அடங்கியிருந்தது என்பதை அப்போதுதான் உணர்ந்தோம்.
  • அந்த நவம்பர் கூட்டங்களின் முடிவில், எங்கள் அடுத்தகட்ட பணிகள் தெளிவாக இருந்தன: நவம்பர் 7-க்குள் இணையதளத்தைப் பதிவு செய்வது; திஷாவும் நானும் 2025 காலநிலை வார ஒப்பந்தம், ஆதரவுக் கடிதம், மற்றும் தொடர்புடைய பிற ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்வது.
  • நிதியுதவிக்காக பலரிடம் அணுகினேன். ஆனால், தொடர்ந்து மறுப்புகளே வந்தன. அந்தச் சூழலில் எடுத்த ஒரு முடிவு, அதன் பிறகான அனைத்தையும் தீர்மானித்தது—நிதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த முயற்சியை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம்.
  • அந்த ஒரு முடிவே இந்த முயற்சியின் வடிவத்தை மாற்றியது. அனைத்தையும் ஒரே மையத்தில் ஒருங்கிணைக்க வேண்டிய வளங்கள் இல்லாதபோது, இந்த வார நிகழ்வுகளை பலரின் பங்களிப்புடன் உருவாக்குவது ஒரு சமரசமாக இல்லை; அதுவே இந்த முயற்சியின் தனித்துவமான அணுகுமுறையாக மாறியது.
  • டிசம்பர் 7 அன்று, ஷகுன், ஸ்வாதி மற்றும் நான் இணைந்து “காலநிலை வாரம்” நிகழ்வின் முழுமையான திட்ட ஒத்திகையை மேற்கொண்டோம். நிகழ்வை நோக்கிய பயணத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய முன்னோட்ட நிகழ்வை நடத்த முடிவு செய்தோம். அதன் முதல் கட்டமாக, XR வடிவமைப்பாளர்களையும் இந்திய காலநிலை குழுவை சேர்ந்த வடிவமைப்பாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டோம்.
  • டிசம்பர் 2024-இல் திவ்யா இந்த முயற்சியில் முழுமையாக இணைந்தது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கூட்டாண்மைக்கான முதல் நோக்கக் கடிதத்தை அவர் உருவாக்கி, அடுத்த கட்ட இணைப்புகளுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
  • முதல் ஒப்புதல்கள் விரைவிலேயே வந்தன: பெங்களூரு கிரியேட்டிவ் சர்க்கஸ், டெர்ராகான்ஷியஸ், ஹைய்யா, TINEB மற்றும் ஆல்ட் எஃப் ஆகியோரிடமிருந்து. ஐந்து உறுதியான “ஆம்”கள். அந்த தருணத்தில், இது வெறும் ஒரு யோசனை அல்ல; பலரின் நம்பிக்கையுடன் வடிவம் பெறத் தொடங்கிய ஒரு கூட்டு முயற்சி என்பதை உணர்ந்தோம்.

ஜேக்கப் செரியன், வழிநடத்துவார், காலநிலை வாரம் இந்தியா

இந்தப் பதிவின் இணைப்பை நகலெடுக்க https://climateweek.in/ta/blog/#post-october-to-december-2024